(அகீதா) கொள்கை - 200 வினா · Web view Tamil – தம ழ...

Click here to load reader

 • date post

  06-Feb-2020
 • Category

  Documents

 • view

  0
 • download

  0

Embed Size (px)

Transcript of (அகீதா) கொள்கை - 200 வினா · Web view Tamil – தம ழ...

(அகீதா) கொள்கை - 200 வினா விடைகள்.

(அகீதா) கொள்கை - 200 வினா விடைகள்.

] Tamil – தமிழ் –[ تاميلي

அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)

தமிழில்: அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.

2014 - 1435

200 سؤال وجواب في العقيدة

« باللغة التاميلية »

للعلامة الشيخ: حافظ بن أحمد بن علي الحكمي

ترجمة: عبد الستار بن عبد الرشيد

2014 - 1435

இஸ்லாமிய (அகீதா) கொள்கையுடன் தொடர்பான

200 வினா விடைகள்.

நூலாசிரியர்

அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)

தமிழாக்கம்.

அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

சங்கைமிக்க மார்க்க மேதை அஷ்ஷெய்க் ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ” என்பதே இவரது இயற்பெயராகும். ஷெய்க் அவர்கள் “மத்ஹஜ்” கோத்திரத்தின் ஒரு பிரிவான “ஹகம் பின் சஃத் அல் உஷைரா”வுடன் இனைத்து அல்ஹகமி என அழைக்கப் பட்டார். சவுடதி அரேபியாவின் தென்கிழக்கில் உள்ள “ஜாஸான்” இல் அமையப் பெற்ற “அல் மளாயா” நகருக்கு உற்பட்ட “அல் ஸலாம்” கிராமத்தில் ஹிஜ்ரி 1342 ம் வருடத்தில் பிறந்தார்கள். பின்னர் அவரது தந்தையுடன் பிரபல்யமான “சாம்தா” நகரத்துக்குற்பட்ட “அல்ஜாளிஃ” கிராமத்தை நோக்கிப்பயணமானார். அங்கே தாய் தந்தை அரவனைப்பிலே வாழ்ந்து வந்த அவர்கள் அக்கால சமூக வழக்கத்துக்கேட்ப அவரது பெற்றோர்களுக்காக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டார். எனினும் மனன சக்தியிலும், விவேகத்திலும் அக்கால இளைஞர்களுக்கு மத்தியில்​ ஒரு அத்தாட்சியாகத் திகழ்ந்தார்கள். வெறும் பனிரெண்டு வயதுக்குள் அல் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்தார்கள். அவரையும் அவரது மற்ற புதல்வரான முஹம்மத் பின் அஹ்மத் என்பரையும்​ பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி கல்வியூட்ட விரும்பாத தந்தை அக்கிராமத்தில் வாழ்ந்த ​ அஷ்ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” (ரஹ்) என்பவரை அவ்விருவருக்கும் ஆசிரியராக நியமித்தார்.​ பின்னர் இவருடைய தந்தை ஹிஜ்ரி 1360 ம் வருடத்தில் வபாத்தாகவே தனது ஆசிரியரு டனே கல்வி கற்க முழு நேரத்தையும் செலவிட்டார்கள். அவரைப்பற்றி அவரது ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்; (அக்காலத்தில் கற்பதிலும் கல்வி போதிப்பதி லும் நூல்கள் இயற்றுவதிலும் நிர்வாகத்திலும் அவருக்கு நிகரான ஒருவர் அப்பிரதேசத்தில் இருக்கவில்லை). எனவே அவருடைய ஆசிரியர் அவருக்கு தனது செல்வப் புதல்வியைத் திருமணம் செய்து வைத்தார் பின்னர் அவ்விருவரும் மார்க்க அறிவைக் கற்கக்கூடிய (ஸாலிஹான) நல்ல குழந்தை களை ஈன்றெடுத்தார்கள்.​​

ஹிஜ்ரி 1362 ம் ஆண்டில் ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” அவருடைய மாணவர் “ஹாபில் அல் ஹகமி” என்பவரிடம் நடாத்திய மாதிரிப் பரீட்சையில் “ஸாலிஹான” முன்னோர்களின் இஸ்லாமியக் கொள்கையை ஒரு ஏகத்துவக் கவிதை நூலில் இயற்றுமாறு பணிந்தார்கள்​ உடனே அவர்கள் (أرجوزة سلم الوصول إلى علم الأصول) “அடிப்படை அறிவின்பால் அழைத்துச்செல்லும் ஏணி” என்ற கவிதை நூலை இயற்றினார்கள். இது தவிர இஸ்லாமிய மதச்சட்டம், அதன் அடிப்படைகள், ஏகத்துவம், நபிகளாரின் வாழ்கை வரலாறு, சொத்துப்பங்கீடு போன்ற துறைகளில் உரை நடையிலும் கவிதை நடையிலும் பல நூல்களை எழுதியுள்ளார். அச்சிலேறிய, அச்சிலேறாத பதி​​​னைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர்கள் தனது இளமையிலே​ ஹிஜ்ரி 1377 ஆண்டு ஹஜ் கடமைகளை முடித்த பின்னர் புனித மக்கா நகரி​லேயே வபாத்தாகி அங்கேயே​ நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவரை விசாலமான சுவனபதியில் குடியிருத்துவானாக. ​ ​

200 வினா விடைகள்.

1. வினா; அடியார்கள் மீதுள்ள முதல் கடமை யாது?

1.விடை

அடியார்கள் மீதுள்ள முதல் கடமை அல்லாஹ் அவர்களை எதற்காகப் படைத்து, அவர்களிடம்​உறுதிமொழியும் வாங்கினான், மேலும் தூதர்க ளையும் அவர்களிடம் அனுப்பி, அவனது வேதங்ளையும் இறக்கினான், இம்மை​, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்றவைகளையும் படைத்தான். மேலும் ​கியாமத் நாள் வருவதும் (மீஸான்) தராசில் நிறுக்கப்படுவதும், (நன்மை​​தீமை) ஏடுகள் வழங்கப்படுவதற்குமான உண்மைகளை​​ப் விளங்கிக்கொள்வதேயாகும்.

2. வினா; அல்லாஹ் படைப்பினங்களை எதற்காகப் படைத்தான்?​​ ​​​ ​

2. விடை

அல்லாஹ் தனது திருமறையில் இது சம்பந்தமாக பின்வருமாறு கூறுகின்றான்.​

1- (வானங்களை​யும், பூமியையும், அவ் விரண்டுக்கு மத்தியிலுள்ள வைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை, (நிச்சியமாக) அவ்விரண்டையும் உண்மையைக் கொண்டே தவிர - நாம் படைக்கவில்லை, எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிய மாட்டார்கள்.) அத்துகான் 37,38

2- (வானத்தையும், பூமியையும், இவை இரண்டுக்கு மத்த